மதவாச்சி சோதனை முற்றாக நீக்கம்; மன்னார் கோட்டையிலும் நீக்கப்படும்
>> Wednesday, 4 November 2009
மதவாச்சி சோதனை நிலையத்தில், கடந்த மூன்று வருடங்களாக நடைமுறையில் இருந்த சகல போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் நேற்றுப் பிற்பகல் 2 மணியுடன் நீக்கப்பட்டன. இனிமேல் எந்தவித சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எவையும் இன்றி வாகனம் போக்குவரத்துச் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.
அதே போல் மன்னார் கோட்டை சோதனைச் சாவடியில் செய்யப்படும் சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளன என மன்னாரில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் வட பிராந்தியத்தில் இருந்து வெளிச்செல்பவர்களும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருபவர்களும் மதவாச்சியில் வைத்து சோதனை செய்யப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறாத வாகனங்கள் மதவாச்சி ஊடாக செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சகல வாகனங்களும் மதவாச்சியில் வைத்து சோதனை செய்யப்பட்டன.
நேற்றுத் தொடக்கம் மதவாச்சியில் உள்ள தடைமுகாம் திறக்கப்பட்டுள்ளது என்றும் சகல வாகனங்களும் எந்தவித பாதுகாப்பு அமைச்சு அனுமதியும் இன்றி மதவாச்சித் தடை முகாம் ஊடாகப் பயணம் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மன்னார் நுழைவாயில் சோதணைகள் இம்மாதம் 10ம் திகதி முதல் நிறுத்தப்படும்.
மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாதம் 10ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உ
றுப்பினருமான பஷில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மன்னார் நகர மண்டபத்தில் இன்று (05.12.2009) இடம்பெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
மன்னார் நகரின் நுழை வாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் தினமும் புதுப்புது சட்டங்களும் திட்டங்களும் அமுலாகி வந்த நிலையில் நிர்க்கதியான நிலைக்கு பொது மக்கள் அன்றாடம் தள்ளப்பட்டே வந்தனர்.
மன்னார் நகருக்குள் பிரவேசிக்கும் மன்னார் மாவட்டத்தை சோந்தவர்களே தீவுப்பகுதிக்கு வெளியே வசிக்கும் காரணத்திற்காக நகரின் நுழை வாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் கடற்படையினரிடம் தமது அடையாள அட்டைகளை ஒப்படைத்தே மன்னார் நகரிற்குள் நுழையவேண்டிய நிலை இருந்துவருகின்றது.
நகருக்குள் பிரவேசிக்கும் மன்னார் மக்கள் தினமும் தங்கள் தேசிய அடையாள அட்டைகளை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களினால் வழங்கப்படும் பாஸ் அட்டையை பெற்றே மன்னார் தீவுக்குள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே போல் மாவட்டத்திற்கு வெளியே வசித்து வருபவர்கள் மன்னாரிற்குள் நுழையும் போது அவர்கள் தமது அடையாள அட்டைகளை கடற்படையினரிடம் ஒப்படைப்பதோடு நகரில் வதியும் நபர் ஒருவரையும் பிணையில் நியமித்தே மன்னார் நகருக்குள் நடமாட வேண்டும் எனும் நிர்ப்பந்தமும் நிலவி வருகின்றது.
இந்நிலையில் இன்று மன்னாரிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவின் மேற்படி அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் தோற்றுவித்திருக்கின்றது.

தொடர்புபட்டசெய்தி-
மன்னார் - கொழும்பு நேரடிப் போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை