கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

சிவராத்திரியன்று திருக்கேதீஸ்வரத்தில் இந்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி

>> Friday, 30 October 2009



மகா சிவராத்திரி தினமான நாளை சனிக்கிழமை பாடல் பெற்ற திருக் கேதீஸ்வரர் ஆலயத்தில் இந்தியத் தூத ரகத்தின் அனுசரணையுடன் இந்தி யக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி களும் நடைபெறவுள்ளன.

மகா சிவராத்திரி தினமான நாளை சனிக்கிழமை பாடல் பெற்ற திருக் கேதீஸ்வரர் ஆலயத்தில் இந்தியத் தூத ரகத்தின் அனுசரணையுடன் இந்தி யக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி களும் நடைபெறவுள்ளன.

காலை 5மணிக்கு ஆரம்பமாகும் சிவராத்திரி சிறப்புப் பூஜை வழிபாடு களைத் தொடர்ந்து அபிஷேக,கும்ப பூஜைகள் நடைபெறும். மறுநாள் காலை 5.30மணிக்கு வசந்த மண்டப அலங்காரப் பூஜை நடைபெற்று கேதீஸ்வரநாதர் கௌரி அம்பாள் சமே தராக பாலாவி தீர்த்தக்கரைக்கு உலா வருவார். சிவராத்தி வழிபாடுகளில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, திருக் கேதீஸ்வரம் கௌரி அம்பாள் வித்தி யாசாலை, மன்னார் சித்திரி விநாயகர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலை களின் மாணவர்கள் வழங்கும் திரு முறைப்பாடல்களும், செஞ்சொற் செல் வர் ஆறு.திருமுருகன், சிவஸ்ரீ ம.பால கைலாசநாதசர்மா, சிவத்தமிழ் வித்த கர் சிவ.மகாலிங்கம், ஏ.அனுசாந்தன் ஆகியோரின் சமயச் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன.

இவர்களுடன் இந்தியத் தூதரகத் தின் அனுசரணையு டன் இந்தியாவி லிருந்து வருகைதரும் தேவார இசை மணி திருமதி விஜய லஷ்மிராஜராம், தமிழ் இசைத் தென் றல் திருமதி மீனாட்சி ஸ்ரீநிவாசன் ஆகியோரின் திருமுறைப் பக்திப் பாடல்களும் நடைபெறவுள்ளன என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித் துள்ளது.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP