மன்னாரில் டெங்கை கட்டுப்படுத்த பனிகள் மீண்டும் ஆரம்பம்.
>> Tuesday, 6 October 2009
3-12-2010]மன்னார் மாவட்டத்தில் கடந்த 01ஆம் திகதி முதல் செவ்வாய்கிழமை 07ஆம் திகதி வரை தேசிய டெங்கு காட்டுப்பாட்டு வாரமாக அமுல்படுத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யுட் ரதனி தெரிவித்தார்.
கொழும்பு சுகாதார செவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் அமுல் படுத்தப்பட்ட தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வார நிகழ்ச்சித்திட்டத்திணை வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி; அவர்கள்ன் வழிகாட்டலின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 03ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை இரானுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சுகாதார திணைக்களங்களின் அதிகாரிகள் வேலைத்திட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இதன்போது பாடசாலைகள்,வீடு,பொது இடம் போன்றவற்றில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மன்னார் செய்தியாளர்-SRL