கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மடு அன்னை

>> Tuesday, 15 September 2009


மடு அன்னை (Shrine of Our Lady of Madhu) கன்னி மேரியின் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்வர்.ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது.இனப்போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். ஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலையின் பாதுகாப்புக் கருதி அச்சிலை ஏப்ரல் 4, 2008 இல் மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



(இப் பக்கம் இன்னும் முழுமையாக பதியப்படவில்லை பக்கத்தை உருவாக்குவதற்குக்கு உதவி செய்யுங்கள் )

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP