இராமர் பாலம்
>> Tuesday, 15 September 2009
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பிரிப்பில் மன்னார்க்குடா முக்கியமானது. மன்னார்க்கடல் எப்போதும் அதாவது இதிகாச காலந்தொட்டு இன்று வiரையில் பேசப்பட்டும் புழங்கப்பட்டுமே வருகிறது. இராமர் பாலம் இராமாயணத்தில் மான்னாரின் ஊடாகவே இராமசேனை இலங்கைக்குள் புகுந்ததாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இப்போது இராமர் பாலப் பிரச்சினை இந்தியாவில் உச்சக்கட்ட்த்தில் இருக்கிறது. மன்னார் வளைகுடாவினூடாக கப்பற்போக்குவரத்துக்கான பாதையை நிர்மாணிக்க இந்தியா முயல்வதினூடாகவும் மன்னார் முக்கியத்துவம் பெறுகிறது இன்றைய நவீன காலத்தில். இந்தப் பாலத்தை நிர்மாணிக்கவேண்டுமாயின் கடலை அகழ வேண்டும். அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டிருந்தன. ஆனால் இராமரால் போடப்பட்ட பாலத்தை இப்பொழுது அரசியல் தேவைகளுக்காக யாரும் சிதைக்கக்கூடாது என்று நீதிமன்றம் வரை போய்விட்டார்கள் பாரதீய ஜனதாக் கட்சியினர். கருணாநிதிக்கெதிரான அரசியற் போட்டியில் ஜெயலலிதாவும் இந்த சேதுக் கால்வாய்த் திட்டத்துக்கு கடுமை

இராமர் பாலம் (Adam's Bridge) என்பது ?
தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30
அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன.
2005 ஆம் ஆண்டு இந்திய அரசு இப்பாலத்தை சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி அருகே ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு ம்ற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும். ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் ராமகர்மபூமி இயக்கம் ஈடு பட்டுள்ளது.
புராணம்
புராணக்கதையான இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்ற நம்பிக்கையாலேயே இப்பாலம் இப்பெயரைப் பெற்றது.
நாசாவின் விண்வெளி புகைப்படத்தில் காணப்படும் இந்த பாலத்தை சில இந்து அமைப்புகள் இதற்கு சான்றாக கருதுகின்றன. ஆனால் நாசா இதை சான்றாக அங்கீகரிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி
இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது.[1] சில புவியியல் வல்லூனர்கள் இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றதிற்கு அளித்த அறிக்கையில் இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ட்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் (geological survey of India) நடத்திய ஆராய்ட்சியில் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிடப்பட்டு, கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்ந்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை நிருபிக்கப்பட்டது.