இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
>> Wednesday, 30 September 2009
23-11-2010 /-தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்று(23.11) கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்றதாக மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.
வவுனியா,மன்னார்.கிளிநொச்சி,முல்லைத்தீவு,மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 05 மாவட்டங்களில் போட்டியிடும் சுமார்105 வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பனிப்பாளர் நாயகம் பியும் பெரேரா கலந்து கொண்டு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இத்தேர்தல் தொடர்பான விளக்கங்களை தெரிவித்தார்.மேற்படி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 18 பேரும்,வவுனியா மாவட்டத்தில் 19 பேரும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 08பேரும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேரும்,யாழ் மாவட்டத்தில் 52பேரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.